130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை படிமங்கள் மீட்பு130 மில்லியன் ஆண்டுகள் பழமையான 30 டைனோசர் முட்டை படிமங்கள் சீனாவில் மீட்கப்பட்டுள்ளன. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் உள்ள குவாங்சு நகரில் குறித்த டைனோசர் முட்டை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளை, குறித்த முட்டை படிமங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சீனநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் அந்த பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த டைனோசர் முட்டையின் ஓடு, 2 மில்லிமீற்றர் தடிமன் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முட்டைகளை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முட்டைகள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...