Jan 24, 2018

ஏறாவூரில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட கணித பாட ஆசிரியரை 14 விளக்க மறியலில்ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியில் வைத்து கணிதப் பாட ஆசிரியர் அலி முஹம்மது என்பவர் தனது மகனை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், பாடசாலை நிர்வாகத்தை தான் அனுகி நியாயம் பெற்றுத் தரும்படி கோரிய போதும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதினால் தனக்கு நீதியை பெற்றுத் தரும்படி கோரி ஏறாவூரைச் சேர்ந்த ஒரு தாய் கடந்த சனிக்கிழமை 13.02.2018 காலை 11 மணியளவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஏறாவூர் கிளைக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கோரிக்கை கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்த கிளை நிர்வாகம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த சிறுவனையும், பெற்றோர்களையும் அழைத்து சென்று முறைபாடு ஒன்றை பதிவு செய்த பின் பொலிசாரின் அறிவுறுத்தல் பிரகாரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.

குற்றத்தின் விபரீதத்தை உணர்ந்த பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் சில பிரமுகர்கள் உடனடியாக சிறுவனின் தாயை அனுகி பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று பேரம் பேசினார்கள். பாடசாலை நிர்வாகத்தின் செயல்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் குறித்த கணித பாட ஆசிரியரினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர் சிகிச்சை பெற்று வரும் செய்திகள் தொடர்பாகவெல்லாம் அமைதி காத்து வந்தது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத். சிறுவனின் சிகிச்கை முடிவுற்ற பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

சம்பவம் நடைபெற்று சில நாட்கள் தாண்டியும் ஏறாவூர் பொலிஸில் நாம் மேற்கொண்ட முறைபாடு தொடர்பில் எந்த வித முன்னேற்றமான செயல்பாட்டிலும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஈடுபடாத காரணத்தினால் 22.01.2018  ASP அலுவலகத்தில் ASP யை நேரில் சந்தித்து முறைபாடு செய்தது தவ்ஹீத் ஜமாஅத்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியின் அசமந்தம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கும் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டது. 

குறித்த சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரித்து அறிந்து கொண்ட ASP அவர்கள் இரண்டு நாட்களுக்குள் குற்றவாளியை கைது செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். 

விபரீதத்தை உணர்ந்து கொண்ட சம்பந்தப்பட்ட நபர் (கணித பாட ஆசிரியர்) இன்று (23.01.2018) செவ்வாய் கிழமை 10 நாட்களின் பின்னர் ஊர் பிரமுகர் ஒருவரின் உதவியுடன் பொலிஸில் சரணடைந்தார். 

பின்னர் மாவட்ட நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட குறித்த நபரை பினையில் வெளியில் எடுக்க சிலர் பாரிய முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீதி மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி பினை வழங்குவதற்கு பாரிய எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் குறித்த நபருக்கு பினை மறுக்கப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்படும் சிலபேரின் இது போன்ற நடத்தைகள் சமுதாயத்திற்கே தலை குனிவை ஏற்படுத்தும் செயல்களாகும். இது போன்ற அசிங்கமான காரியத்தில் ஈடுபடுவோருக்கு சட்ட ரீதியாக உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படா விட்டால் இன்னும் பல பேர் இதுபோன்றவர்களினால் பாதிக்கப்படுவதோடு, இது போன்ற அசிங்கமான காரியத்தில் ஈடுபடுவோர் பயமற்ற தைரியமாக இது போன்ற காரியத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியை நாம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

குறித்த நபர் இவ்வளவு பாரிய குற்றத்தை செய்திருந்த போதும், அவரை காப்பாற்றுவதற்காக சில பேர் பாரிய முயற்சிகளை செய்தது மாத்திரமன்றி குறித்த சிறுவனின் பெற்றோருக்கும் அளுத்தங்களை பிரயோகித்தார்கள். 

அல்லாஹ்வின் அருளினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக களத்தில் இறங்கியதன் விளைவாக 14 நாட்கள் அலி முஹம்மத் என்வர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது இறைவன் தந்த முதல் கட்ட வெற்றியாகும்.

ஊடகப் பிரிவு
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post