Jan 18, 2018

2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்!



லிந்துலை – மெராயா நகரில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக லிந்துலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மனித பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை.
சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் கணிப்பீடு செய்யப்படவில்லை என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network