Jan 25, 2018

இ.போ.ச. வுக்கு 60 வருடம் பூர்த்தி




 இலங்கையில் தனியாருக்குச் சொந்தமான போக்குவரத்துப் பேரூந்துகள்  யாவும் மக்களுடைமையாக்கப்பட்டு மற்றும் "இலங்கை போக்குவரத்துச் சபை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 60 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு, கொழும்பு - நாராஹேன்பிட்டியில் உள்ள இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையின் பிரதான காரியாலயத்தில் மத வழிபாடுகள் மற்றும் பிரதான வைபவங்கள் பல இடம்பெற்றன. 

தனியார் போக்குவரத்துத் துறை, 1958 ஜனவரி மாதம் முதல், அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவினால் இலங்கை போக்குவரத்துச் சபையாக மக்கள் மயமாக்கப்பட்டதை நினைவுகூரும் முகமாக, அன்னாரின் உருவப் படத்திற்கு இ.ம.போ.ச. தலைவர் ரமால் சிறிவர்தன மலர் மாலை அணிவிப்பதையும், காரியாலய முற்றவெளியில் மரக்கன்று ஒன்றை நட்டி வைப்பதையும், போக்குவரத்து அதிகார சபையின்  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.


( ஐ. ஏ. காதிர் கான் )

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network