எனது அரசியல் பிரவேசம் சாய்ந்தமருதுக்கான சபையை பெற்றுகொள்வதே குறிக்கோள்(றியாஸ் இஸ்மாயில்)

சாய்ந்தமருதுலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பதற்கு மாற்றுக் கட்சியினரின் கோசமே சாய்ந்தமருது பிரதேச சபைக்கான கோரிக்கையாகும்.எனது அரசியல் பிரவேசம் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை பெற்றுகொள்வதே குறிக்கோளாக கொண்டுள்ளேன் என என கல்முனை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சாய்ந்தமருது 23ம் வட்டாரத்திற்கான வேட்பாளரும் கட்சியின் மூத்த போராளியுமான சமூகநேயன் ஏ.எம்.முபாறக் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது 23ம் வட்டாரத்தில் போட்டியிடும் AM முபாறக் அவர்களை ஆதரித்து அவருடைய இல்லத்தில் இன்று(05) இடம்பெற்ற கூட்டத்தில் அதிகமான இளைஞர்களுடன் பலரும் கலந்துகொண்டனர் வேட்பாளர் முபாறக் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இம்முறை மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வட்டார மக்களின் பூரண ஆதரவும் ஆசிர்வாதத்தோடும் நான் களமிறக்கப்பட்டிருக்கிறேன் மக்களுடைய தேவைகளை நன்கு உணர்ந்தவன் என்றவகையிலும் எங்களை நாங்களே ஆழுகின்ற ஆளுமையோடு சாய்ந்த மருதுக்கான பிரதேச சபையினைபெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக என்னையும் அதற்கான மக்கள் பிரதிநிதியாக அடையாளப்படுத்தியுள்ளளனர் எமது சபையை பெற்றுக்கொள்ளும் தேர்தலாக எதிர்வரும் இத்தேர்தலை மக்கள் பயண்படுத்தி யாகவேண்டும் யானை சின்னத்திற்கு. வாக்களித்து என்னை வெற்றிபெறசெய்வதோடு படித்த இளைஞர்கள் யுவதிகளுக்கான அரசதொழில் வாய்ப்பை அடைந்து கொள்வதோடு ஊரின் அபிவிருத்தி உட் கட்டமைப்பிலும் தான் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் பரம்பரை பரம்பரையாக வாக்களித்து வருகின்றனர் இக் கட்சிதான் எமது சமுகத்தின் நிலையான கட்சியாகும் மாற்று கட்சிகாரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும் ஏமாற்றும் வித்தைக்கும் இத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவதோடு இவர்களின் பின்னால் செயற்படும் பச்சோந்திகளின் முகத்திரை கிழிக்கப்படும் விட்டுக்கொடுப்பும். நெகிழ்வுத்தண்மையும் கொண்ட எம் மக்களை குளப்பி அரசியலில் ஒரு சிலரின் பதவிமோகத்தின் வெளிப்பாடே

சர்வதேச சமுகத்தின் கழுகு பார்வையும் இலங்கையிலுள்ள பெரும்பான்மையின் விசமப் பார்வைக்கும் இளைஞ்சர்களை பலிக்கடவாக்கும் நமது ஒரு சில சுயநல அரசியல் வாதிகள் திட்டம் தீட்டி வருவதாகவும் விசனத்தை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சாய்ந்தமருது வட்டாரத்திலுள்ள ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெறுவர் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தினை 25 மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று நாங்கள் ஆட்சியமைப்போம் மக்கள் எங்களுடன் உள்ளனர் மாற்றுக் கட்சியினர் இங்கு தோல்வியடைவர்கள் இவர்களினால் ஒரு போதும் ஆட்சியமைக்க முடியாது இவர்களின் சதிகளுக்கு மக்கள் தேர்தலின் ஊடாக நல்ல பாடம் புகட்டுவார்கள்

எமது தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் ஊடாக சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான பிரதேச சபையை பெற்றுக் கொடுப்போம் இதற்கான சகல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...