Jan 27, 2018

கிந்தோட்டைக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன நஸ்ட்ட ஈடு கொடுத்தார்கள்? மஹிந்தஎம்.எஸ்.எம்.நூர்தீன்

பின்னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கை கோர்க்குமாறுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

காத்தான்குடியில் வெள்ளிக்கிழமையன்று (26.1.2018) நடைபெற்ற சிரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் தேர்தலில் பிரச்சாரக் கூட்;டத்தில் உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்
இன்று நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதுஅசிரி விலைபருப்பு விலை சீனிவிலை என அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
மண் விலையும் அதிகரித்துள்ளது.

இன்று நாட்டில் எங்கள் மீது பொய்யான பிரச்சாரங்களை கூறி ஆட்சியைப் பிடித்தார்கள்.இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற் கொண்டவர்கள் நாங்கள்தான்.

 கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் நாம் பட்ட துன்பங்களை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்நமது மார்க்க கடமைகளை கூட பாதுகாப்போடுதான் செய்ய வேண்டியிருந்தது.

இந்த சூழ் நிலையில்தான் சுனாமி அனர்த்தமும் இந்த பிரதேசத்தில் ஏற்பட்டதுயுத்தத்தின்அழிவகளையும் சுனாமி அனர்தத்தின் அழிவுகளையும் நாம் புனரமைப்பு செய்து இந்தநாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற் கொண்டோம்.  பிள்ளைகள் பாடசாலைகளுக்குசெல்ல முடியாத நிலை இருந்தது.
இன்று பல்கலைக்கழகத்திற்கு அச்சமில்லாமல் சென்று வரக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய அரசாங்கம் எதை செய்துள்ளதுநாங்கள் வீதிகளை செப்பணிட்டோம்,அபிவிருத்தி செய்தோம்நீர் விநியோகத்தினை மேற் கொண்டோம்மின் சாரத்தினைவழங்கினோம்.
 இந்த நிலையில் தான் எங்கள் மீது தடை ஏற்பட்டதுமூன்று வருடங்களாக எந்தஅபிவிருத்தியுமில்லாத மந்த கதியில் நாடு காணப்படுகின்றது.

உலகத்தில் எங்கும் இடம் பெறாத பாரிய கொள்ளை இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளையாகும்அரசாங்கம் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் தான்ஈடுபட்டு வருகின்றது.

இதனால் நாட்டு மக்கள் வட்டி செலுத்த வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளதுஇதனால்தான்நாட்டில் பொருட்களின் விலை யுயர்வு ஏற்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்கள் இல்லைஇதனால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதுமக்கள்பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.உலகிலேயே முன்னேற்றமான நாடாக இலங்கைகாணப்பட்டதுஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைபின்னடைவை இலங்கைக்கு பின்னடைவை ஏற்பட்டுள்ளது.

ஒருவொருக்கொருவர் கை கோர்த்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.பேருவலை பிரதேசத்தில் இடம் பெற்ற பிரச்சினையை எங்கள் மீது சேறு பூசி இந்தநல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை எடுத்துக் கொண்டு சுகபோகங்களைசிலர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்கள் மீதான சதித்திட்டத்தினை அமைச்சர் ஒருவர் அரங்கேற்றும் கலந்துரையாடல்வீடியோ காட்சி யொன்றை நான் இனைய தளமொன்றில் பார்வையிட்டேன்.

அன்று பள்ளிவாயல் மீது ஒரு சம்பவம் இடம் பெற்ற போது நாட்டின் ஜனாதிபதியான நான்நாட்டில் இருக்க வில்லைபாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இருக்க வில்லை..நாட்டுக்கு வந்தவுடன் உடனடியாகவே நாங்கள் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட்டஈடு கொடுத்ததுடன் அங்கு அழிக்கப்பட்ட வீடுகளையும் புனரமைப்பு செய்துகொடுத்ததுடன் பள்ளிவாயலையும் சிறப்பான புனரமைப்பு செய்தோம்.

அன்மையில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஜிந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைஇடம்பெற்றதுஇந்த நல்லாட்சி அரசாங்கம் என்ன நஸ்ட்ட ஈடு கொடுத்தார்கள்ஒருசதமேனும் கொடுக்க வில்லைஇதுவரைக்கும் அவர்கள் அமைதி காக்கின்றார்கள்.

எனவே இந்த நிலையில் எங்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள் உங்களோடுஎன்றுமிருப்போம் உங்களுக்கு உதவுவோம் என மேலும் தெரிவித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network