Jan 24, 2018

அதிவேக வீதிகளில் பயணிக்கும் மற்றும் கொழும்பு சாரதிகளுக்கு ஓர் அறிவித்தல்



இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடொடோ இன்று இலங்கைக்கு விஜயம் செய்வதுடன், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியான் இன்று தனது பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

இந்த நிலையில் கட்டுநாயக்க அதிவேக வீதி உள்ளிட்ட கொழும்பின் சில வீதிகளின் போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த போக்குவரத்து மட்டுப்படுத்தலானது முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2 மணி வரையான கால எல்லைக்குள் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் வீதிகளில் கட்டுநாயக்க அதிவேக வீதி ஊடாக பேலியகொடை, பண்டாரநாயக்க மாவத்தை, ஒருகொடவத்தை, தெமட்டகொட, பொறள்ளை, டீ.எஸ்.சந்தி, க்ரீன் பார்க், தாமரை தடாக சந்தி, நூலக சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம் ஊடாச புனித மைக்கல் வீதி ஊடாக காலி வீதிவரையான பகுதிகள் அடங்குகின்றன.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post