பலதடவை அழைத்தும் ஹக்கீம் வழங்காததால் அதாவுடன் இணைகிறார் சேகு!முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரசின் துாணாக இருந்த வரலாறுகளை யாரும் மறக்கமுடியாது, சேகு இஸ்ஸதீன் மு.காவிற்கு எதிர்ப்பு அரசியல் செய்து பல வெற்றிகள் பெற்றால் பலமுறை தோல்வியும் கண்டார். மீளவும் மு.காவுடன் இணைய சம்மதம் என்ற விடயத்தை பலமுறை கூறிய சேகு இம்முறை தேர்தல் காலத்தில் மு.காவுடன் இணையப்போவதாக குறிப்பிட்டு அக்கரைபற்றில் ஹக்கீமுடன் இணைய நிகழ்வு ஒன்றையும் ஒழுங்கு செய்திருந்தார். அப்போது ஹக்கீம் மட்டக்களப்பில் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

 செய்தியாளர்கள் காத்திருந்த போதும் குறித்த இணைவு இடம்பெறவில்லை எங்கள் ஊடக கணிப்பில் சேகுவின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்கு தவமும் ஓர் காரணமாக இருக்கலாம் காரணம் சேகுவிற்கு - தவமும், தவத்திற்கு சேகுவும் பலமுறை மேடைகளில் துாற்றினார்கள். இவைகள் மீள மு.காவுடன் இணை தடையாக இருந்திருக்கலாம். இன்று ஹக்கீம் அக்கரைப்பற்றில் பொது பிரச்சார மேடையில் உரையாற்ற வுள்ள இத்தருணத்தில் அதாவுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது, இந்த இணைவு பகிரங்க பொதுமேடையில் காரசாரமான பேச்சுக்களுடன் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.