Jan 22, 2018

சிறுபான்மை மக்கள் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும்



சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மாணிக்கமடு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். இரு சமூகங்களும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒற்றுமையுடன் செயற்படுவதற்கான அவசியம் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தமிழர்களின் போராட்டங்களில் முஸ்லிம்களும், முஸ்லிம்களின் போராட்டங்களில் தமிழர்களும் பங்குகொள்ள வேண்டும். ஒரே மொழி பேசுகின்ற சிறுபான்மை மக்கள் ஒற்றுமையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post