ஜனாதிபதி செயலகமா, இல்லை பைத்தியக்கார ஆஸ்பத்திரியா? - அநுரகுமார கேள்விஜனாதிபதி செயலாளர் தனது கடிதத்தில் 34 நிறுவனங்கள் தொடர்பான அறிக்கைகள் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார். அறிக்கை வழங்கி 10 நாட்களுக்குள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அவை காணாமல் போயுள்ளன. இது ஜனாதிபதி செயலகமா அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா என எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.  

பிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் அறிக்கையை, தேர்தல் முடியும் வரை பின்போடவே அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.சபையை முறையாக வழிநடத்துவதில் சபாநாயகர் தவறியதாலே சபையில் எம்.பிகளிடையே மோதல் ஏற்பட்டு இரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (10) அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“நாமும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரியிருந்தோம். பிணை முறி அறிக்கை மற்றும் ஏனைய விசாரணை அறிக்கை என்பவற்றை சபையில் சமர்ப்பித்து விவாதம் நடத்துமாறு கோரியிருந்தோம்.  

“ஆனால் பிணைமுறி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை அதனை ஒருவாரத்தில் தருவதாக ஜனாதிபதி செயலாளர் கூறுவதை ஏற்க முடியாது” என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...