நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கம் கெட்டவர்கள்! - ரஞ்சன் ராமநாயக்கசக நாடாளுமன்ற உறுப்பினர்களை வெட்கம் கெட்டவர்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடுமையாக சாடியுள்ளார்.

தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை இட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமளி துமளி நிலைமை குறித்து ரஞ்சன் ராமநாயக்க விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விசேட அமர்வு இரண்டு மணித்தியாலங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது. இதனால் அப்பாவி மக்களின் 50 லட்சம் ரூபா வரையிலான பணம் விரயமாகியுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது முகநூல் பதிவு பின்வருமாறு,

“ஒருநாள் நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு அப்பாவி மக்களின் 50 லட்சம் ரூபா பணம் செலவாகின்றது. அது பற்றி ஒருவனுக்கேனும் கணக்கில்லை, வரவுக்கான கொடுப்பனவுளை பெற்றுக்கொண்டு வெட்கம் இன்றி இவர்கள் வீடு செல்கின்றார்கள்”
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...