பிணைமுறி விவகாரத்தை பயன்படுத்தி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிஉள்ளூராட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால் பிணைமுறி விவகாரத்தை ஒவ்வொருவரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

பிணைமுறி விவகாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்வதாக அவர் கூறினார். பிணைமுறி விநியோக சர்ச்சை குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக நேற்று பாராளுமன்றம் விசேடமாக கூடியது. இதன்போது ஆளும் கட்சி எதிர்க்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ஹக்கீம் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களில் ஒரு சில பிரிவுகள் ஊடகங்களின் ஊடாக வெளியாகியுள்ளன. இவை மக்களுக்குச் சென்றடைந்துள்ள நிலையில், தேர்தலை இலக்குவைத்து பிணைமுறி விவகாரத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்றார். கிராமத்தில் ஆட்சியை அமைப்பதற்கான தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள சூழ் நிலையில் சிலர் இதனை தமக்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...