மஹிந்தவை நாங்கள் தண்டிக்க முயாது- அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க


மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ளவர்கள் சண்டை பிடித்தாலும், ஏசிக் கொண்டாலும் அவர்கள் தங்களது கட்சியின் சகோதரர்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க  தெரிவித்தார்.
அவர்களை எப்படியாவது எங்களுடன் சேர்த்துக் கொள்ளவே முயற்சிக்கின்றோம். தேர்தலுக்கு முன்னர் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அது கைகூடவில்லை. தேர்தலின் பின்னரும் அந்த முயற்சிகள் தொடரும் எனவும் அவர் கூறினார்.
என்னதான் இருந்தாலும் அவர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தண்டிக்கத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் போன்றே மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நீண்ட நெடும் கட்சிப் பரம்பரை வரலாறுள்ளது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது முடியாது எனவும் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறினார்.