க.பொ.த பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

க.பொ.த பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல்

Share This(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச செயலகமும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையமும் இணைந்து 2017 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு கடந்த 14 ஞாயிற்றுக்கிழமை காத்தானக்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ்மி தாஜூதீனின் ஒருங்கிணைப்புடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு பிராந்தியத் தலைவர் ஏ.எல்.ஏ.ஷிப்லி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயகுமார் உதயஸ்ரீதர், ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் டாக்டர் எம்.எம்.எம்.அயாஷ்,இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளைத் தலைவர் செட்.எம்.சஜி உட்பட ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் 2017 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வில் தேசிய தொழில் வழிகாட்டல் நிறுவனத்தின் அங்கத்தவர்களான நுஷ்ரத்,முஸ்தபா,றம்ஸி,கமால் அய்துறூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்தர பாடத் தெரிவுகள், சுய ஆளுமை விருத்தி தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE