அக்கறைப்பற்றில் நாங்கள் கொண்டு வந்த அம்பாரை மாவட்டத்திற்குரிய சமூக சேவைத்திணைக்களத்தினை கட்டுவதற்குரிய  வேலைத்திட்டங்களை ஆரம்பித்த போது  அதனை நீதிமன்றத்தினூடாக இடைநிறுத்தி விட்டு இப்போது வந்து ஊருக்கு அபிவிருத்தி வேண்டும் என்று சொல்வது நகைச்சுவையாக இருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேலை வாய்புச் செயளாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

927.01.2018) அக்கரைப்பற்றில் இடம்பொற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் நாங்கள் பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்காக நகரத்திட்டமிடல் அமைச்சின் ஊடாக 25 மில்லியன் முதற் கட்ட நிதியாக கொண்டு வந்து வேலைகளை ஆரம்பித்த போது முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாஹ் அதனை தடுத்து நிறுத்தினார் அதே போன்று 2.5 கிலோ மீற்றர் வீதிகளைக் கொண்டு வந்த போது அதையும் இடை நிறுத்தினார்.   

இப்படி பல அபிவிருத்தித் திட்டங்களை கொண்டு வந்த போது ஊரைப்பற்றிச் சிந்திக்காத அதாவுள்ளாஹ் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்றில் மகனை முதல்வராக்குவதற்காக அக்கரைப்பற்று மக்களை ஒரு நாளும் ஏமாற்ற முடியாது  கடந்த 15 வருடங்களாக அமைச்சராக இருந்த அதாவுள்ளாஹ் இன்று வீடு வீடாகவும் வீதி வீதியாகவும்  நடந்து  வாக்குக் கேட்கும் நிலமை இன்று மாறியுள்ளது.

 எனவே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன் முலம் 5 ஆண்டு அபிவிருத்தித் திட்டமொன்றை மேற்கொள்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Share The News

Post A Comment: