Jan 29, 2018

பிரதமர் செய்தது தவறு - வீ.ஆனந்தசங்கரி



2 கோடி ரூபா விவகாரத்தை கையூட்டல் என பாராது ஒதுக்கீடாக பார்த்தாலும், அதற்கு நியாயமற்ற முறையில் செல்வாக்கை பயன்படுத்துவதாகவே கருதமுடியும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தலா 2 கோடி ரூபா பணம் வழங்கிய விடயத்தில் பிரதமர் செய்தது தவறு. நம்பிக்கை இல்லா பிரேரனை வந்தால் பிரதமருக்கு எதிராக அனைவரும் வாக்களிப்பர் எனவும் வீ. ஆனந்த சங்கரி குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பில் பல்வேறு தீர்வு திட்டங்கள் காணப்படுவதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஒன்றுமே இல்லாத தீர்வு திட்டத்திற்கு ஆதரவளிக்கவே இந்த தேர்தலை பயன்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சுமத்தினார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network