Jan 17, 2018

ஸாதாத் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி



மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் இவ்வருடதிற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 23, 24, 25ம் திகதிகளில் ஸாதாத் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இப்போட்டி நிகழ்சிகளில் சம்ஸ், நஜ்ம், கமர், ஆகிய மூன்று இல்லங்கள் போட்டியிடுகின்றன.
மேலும் கடந்த வாரம் எல்லே மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இல்ல விளையாட்டு போட்டி மற்றும் இறுதிநாளில் நடைபெறும் வினோதவுடை போட்டி, உடற் பயிற்சி கண்காட்சி, அணி நடை, பரிசளிப்பு விழாக்களில் பிரதேச மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அதிபர் கேட்டுக் கொள்கிறார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post