Jan 3, 2018

மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாதுஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் 

ஏறாவூர் நகர சபையின் 2018ம் ஆண்டிற்கான நிருவாக நடவடிக்கைகள் இன்று (02) செவ்வாய்க் கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டனஅரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கை 31/2017க்கமைவாக 2018 வேலை ஆண்டு நடவடிக்கைகள்சபையின் செயலாளரும்விசேடஆணையாளருமான.பிர்னாஸ்இஸ்மாயில் தலைமையில்  இடம்பெற்றன.

காலை 9.30மணியளவில் தேசிய கொடியேற்றும் நிகழ்வுகள் சபையின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் முன்னிலையில்இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தபடைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்துடன் இரண்டு நிமிட மௌன இறைவணக்கமும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து நகர சபையின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முன்னிலையில் செயலாளரின் விசேட உரைஇடம்பெற்றதுடன் 

செயலாளர் தனது உரையில்,

விவசாய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதனை முதன்மைப்படுத்தி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நிலைபேறான நோக்குதொடர்பான எண்ணக்கருவும் இன்றைய தினத்தில் பிரகடணப் படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை அடைவதற்காக வேண்டி ஒவ்வொரு அரசநிருவனமும்இந்நாட்டினுடைய ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைக்கவேண்டும்.  2018 ஆம் ஆண்டி எவ்வாறு ஒரு இலக்கினைஅடையவேண்டுமென்ற உன்னதமான நோக்கத்தை அடைவதற்காக சத்தியபிரமாணம் செய்திருக்கின்றோம் என்றார்.

பொதுமக்களின் வரிப்பணத்திலே சம்பளத்தை பெறுகின்ற அரச ஊழியர்களான நாங்கள் நாட்டிக்கு வினைத்திறனாகவும் யாருக்கும்பக்கசார்பின்றியும் நேரிய முறையிலும் பயன்தரக் கூடிய நிலைத்து நிற்கக் கூடிய சேவைகளை வழங்குவதுடன் உறுதி மொழியினைவெறுமனே வார்த்தைகளால் பேசிவிட்டுப் போகக் கூடாதென்றும் இந்த ஆண்டு முழுவதும் நான் ஒரு அரச ஊழியன் மக்களுடையவரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்றேன் அவர்களுக்காக சேவையாற்றுவதுடன் எந்த நேரத்திலும் கடமைப்பொறுப்புக்களிலிருந்து விளகாமல்வருகின்ற மாற்றங்களுக்கும் தயாராக வேண்டும்.

நிருவனத்தினை பொறுப்பேற்று 45 நாட்களிலிருந்து இரவு பகலாக பாடுபட்டுவருகின்றோம்ஏதாவது மாற்றத்தினைக் காணவேண்டுமென்றும்இதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொது மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை வழங்குவேண்மென்ற ஒரே நோக்கத்தில்நாம் இருக்கவேண்டுமென்றும் அற்காக உங்களுடைய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும்.

அலுவலகத்தில் மாற்றங்கள் வருகின்ற போது மலருகின்ற புத்தாண்டு வருடத்தில் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்குவதுடன் எந்தநிறுவனம்  இந்த பணிகளை எவ்வாறு சேவையாற்றவேண்டுமென்ற மாற்றத்தினுடாக மக்கள் அறிந்துகொள்வதுடன் மாற்றங்கள் இல்லாமல்எதையும் மாற்றிவிட முடியாது.

எனவே முதலில் மாற்றங்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும்ஒங்கழுக்கென்று ஒரு திட்டத்தினை வகுத்துக் கொண்டு அது 5 வருடங்கள் அல்லது 1 வருடங்களாகஇருக்கலாம்ஆனால் இத்திட்டத்தினைவகுத்து அதன்படி அரசாங்க கொள்கைகள்அரசாங்க சுற்று நிருபங்கள் மற்றும் நிதி பெறுமான ஏற்பாட்டுக் கொள்கையுடன் சேர்த்துநடவடிக்கைகளை மேற்கொள்வதால் சிறந்த முறையில் மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமேகேள்வி கேட்க முடியாது என்றார்.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network