முஸ்லிம் ஒருவரின் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாதோரால் தீக்கிரை!
(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைச் சேனை பகுதியில் இன்று(04) அதிகாலை 3.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று இனந் தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது எஸ்.எம்.நிஸார்தீன் என்பவருக்கு சொந்தமான துவிச்சக்கரவண்டியே இவ்வாறு முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தனது சொந்த வீட்டில் வைத்து இவ் நாசகார வேலைகள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முழுமையாக முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அதனுடன் சேர்ந்து தளபாடங்கள் மற்றும் பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களும் தீப்பற்றியுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.