அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுக்கு மாத்திரமே தேர்தல் சட்டங்கள் – நாமல்


அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுக்கு மாத்திரமே தேர்தல் தொடர்பிலான சட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகள் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பில் பகிரங்கமாக அறிவித்திருந்தும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைதியாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தங்காலை பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்முறை தேர்தலின் பின்னர் ஜனாதிபதியால் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...