Jan 8, 2018

குப்பைகளை சேர்த்து, செல்வந்தராகிய இலங்கையர் - பிரித்தானியாவில் சாதனை

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் குப்பை சேர்த்து கோடீஸ்வரராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஹர்ஷ ரத்நாயக்க என்பவர் கடின உழைப்பின் காரணமாக பிரித்தானியாவின் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவர் தொடர்பாக பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட செய்தியில்,

ரத்நாயக்க என்பவர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்து கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்கு வந்தார். அங்கு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தானியங்கி பொறியியல் கற்கை நெறியை கற்றவர் Sunderland பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ஒரு வணிக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றார்.

“கழிவுப்பொருட்களை அகற்றும் நிறுவனம் ஒன்றில் பகுதிநேர இயக்க பணிகளுக்காக நான் பணியாற்றியிருக்கிறேன். என் பட்டப்படிப்பைப் படிக்கும்போது வாரம் 20 மணிநேர வேலை செய்வேன்” என 34 வயதான ரத்நாயக்க குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் குப்பைகளை பொறுக்குவது நான் செய்த ஒரே வேலையாக இருந்தது, அதனால் என் படிப்பு முடிந்ததும் தொடர்ந்து அதனை தொடர எனக்கு தோன்றியது. ஆனால் என் முதலாளி வியாபாரத்தை நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு செல்ல முடிவு செய்தார்.

அந்த நிறுவனத்தில் அவருக்கு இருந்த ஒரே சொத்து, 700 பவுண்ட் பெறுமதிய பழைய 3.4 டன் டிப்பர் ட்ரக் வண்டியாகும். என் நிலுவை மாத சம்பளத்திற்குப் பதிலாக அவர் எனக்கு இந்த ட்ரக்கை வழங்கினார், நான் ஏற்றுக்கொண்டேன். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வட லண்டனில் இந்த சம்பங்கள் இடம்பெற்றது.

ரத்னாயக்கவின் முதல் சவால்களில் ஒன்று ஆங்கிலமாகும். அது தனது முதல் தாய் மொழி இல்லை, அவர் ஆங்கில மொழி பேசாத ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்ட ஒருவராகும். எனவே, அவர் தனது திறம்பட காலத்தில் ஆங்கில மொழியை கற்றார், இணைய உதவி மற்றும் யூடியூப் வீடியோக்களில் தானே தனியாக கற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் Junk Hunters என்ற நிறுவனத்தை ஆரம்பித்தவருக்கு குப்பைகளை சேகரிப்பதற்கு, தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கொடுப்பதற்கு, கடன் அட்டைகளை பயன்படுத்துவதற்கேனும் ஊழியர்கள் இருக்கவில்லை.

ஆனால் வங்கிகளிடமிருந்தும் மற்ற கடன் வழங்குனர்களிடமிருந்தும் எந்த நிதி இல்லாமையையும் சமாளிக்க அவருக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது.

“வங்கிகள் எனக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை, ஏனெனில் எனக்கு இங்கிலாந்தில் ஒரு கடன் வரலாறு இல்லை, பணப்புழக்கம் எனக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது” என ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். வங்கிகள் எனக்கு உதவவில்லையென்றால், வேறு எங்கு ஆலோசனை பெற வேண்டும் என்று எனக்கு தெரியாது, எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

நான் என் சொந்த சேமிப்பு பணம் மூலம் ஏதாவது செய்யலாம் என திட்டமிட்டேன். அப்போது என்னிடம் 160 பவுண்ட் மட்டுமே காணப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு பகுதி நேர வேலைகளை செய்ய திட்டமிட்டேன். ஒவ்வொரு நாளும் காலை 4.30 மணியளவில் என் காலை வேலைக்குச் சென்றேன் - ஒரு உள்ளூர் செய்திமடலுக்கு காகித வட்டங்கள் செய்து கொடுப்பதே முதல் பணியாகும். காலை 5.30 மணியளவில் வேலை ஆரம்பித்து 7.30 மணியளவில் முடியும்.

அதன் பின்னர் 8 மணியளவில் வீடு செல்லும் நான் எனது ட்ரக் வண்டியை எடுத்து கொண்டு குப்பை சேகரிக்க செல்வேன். மாலை 5.30 மணியளவில் குப்பை சேரிக்கும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவேன். அதனை தொடர்ந்து 6 மணியளவில் இந்திய உணவகம் ஒன்றில் நள்ளிரவு வரை பணியாற்றுவேன்.

எனது சவால்களை வெற்றி கொள்வதற்கும் என்னை சமாளித்து கொள்வதற்கும் நான் தொடர்ந்து வார இறுதி நாட்கள் உட்பட தினமும் 19 மணித்தியாலங்கள் வேலை செய்து வந்தேன்.

மற்றவர்களின் குப்பைகளை சேகரிப்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என உணர்ந்தார். மேலும் அவர் தனது முதல் வருடத்தில் 70,000 பவுண்ட் இலாபத்தை பெற்றார். ஆனால் சராசரியாக நான்கு மணி நேரம் தூங்கினார்.

Junk Hunters நிறுவனம் முதல் வருடம் முதல், எட்டு வருடங்களுக்கிடையில் புதிய ட்ரக்களை கொள்வனவு செய்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனம் 14 முழுநேர ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் வருடத்திற்கு சுமார் 1.8 மில்லியன் பவுண்ட் வருமானத்தை ஈட்டுகின்றது.

மேலும் எதிர்பார்த்ததனை விடவும் அதிகமான வருமானம் அவருக்கு தொடர்ந்து வருகின்றது. லண்டனில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களில் ஒருவராக அவர் காணப்படுகின்றார். தற்போது அவர் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளின் தந்தையாகியுள்ளார்.

வாழ்க்கையில் தகுதியான தொழிலை முதலில் தெரிவு செய்து படிப்படியாக முன்னேறினால் சிறப்பான ஒரு இடத்திற்கு செல்ல முடியும் என ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network