முஸ்லிம் தேசியம் உருவாகும்


வடகிழக்கு இணைப்பு பிரிப்பு, தமிழர்களுக்கான உரிமை, முஸ்லிம்களுக்கான தனி மாநிலம் என்றெல்லாம் பேசப்படும் இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களி்ன் தீர்வு பற்றி பேச யாருமற்ற துர்ப்பாக்கியசாலிகளாக மாறியுள்ளோம் என பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்,

தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் வாராந்த ஊடக சந்திப்பு இன்று காலையில் இடம்பெற்றது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார், மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,

முஸ்லிம்களுக்கான கட்சிகள் இல்லாத காலத்தில் கூட தேசியக் கட்சிகளில் பதவிகளில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கான பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தனர், ஆனால் இன்று பெற்றதையும் இழந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம், ஆனால் இன்று முஸ்லிம்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கிறது, எந்த சட்டத்தை இவர்கள் இயற்றியிருக்கின்றார்கள் முஸ்லிம்களுக்கு? ஒன்றுமே இல்லை குறைந்த பட்சம் உழ்ஹியா, வெள்ளிக்கிழமை பரீட்சை விவகாரம் இது கூட இல்லை. இப்படியிருக்கும் சிறுபான்மை கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதற்கு? தேசியக் கட்சிகளுடன் பயணிக்கலாமே என்றார்,

முஸ்லிம் தேசியம், அதற்கான கொள்கைகள், சட்டம் இயற்ற வேண்டிய விடயங்கள் குறித்த அதிக கவனம் எடுத்துள்ளோம், இதற்காக பல அமைப்புகளுடன் பேசியிருக்கிறோம். இன்சா அல்லாஹ் தேசியக் கட்சிகளின் உதவியுடன் அவைகள் அமுலுக்கு வரும் எனவும் கருத்துப்பகிர்ந்தார்.