சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபையின் பதவி நீக்கம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமல்  வக்பு சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட வக்பு ட்ரிபியுனல் பதவி நீக்கம் செய்யப்பட் நிர்வாக சபை தொடர்ந்தும் பதவி வகிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் தேர்தல் சட்ட விதிகளை மீறுவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரியை கடிதம் மூலம் வேண்டியிருந்தது. இதற்கமைவாக சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தை பதவி நீக்கம் செய்ததுடன் நால்வர் கொண்ட இடைக்கால நிர்வாக சபை ஒன்றினை  கடந்த 9ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நியமித்தது.

தாம்மை எந்த விசாரணைகளும் இன்றி பதவி நீக்கம் செய்ததற்கும் இடைக்கால நிர்வாக சபையின் நியமனத்திற்கும் எதிராக வக்பு ட்ரிபியுனலில் மனுத்தாக்கல் செய்தது. குறிப்பிட்ட மனுவே கடந்த சனிக்கிழமை விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சாய்ந்தமருது பள்ளி பழைய நிர்வாகம் பணியைத் தொடரலாம்  தீர்ப்பு வழங்கப்பட்டது.

Share The News

Post A Comment: