அரசியல் கூட்டங்களுக்குகல்லெறிவது நாகரீகமா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அரசியல் கூட்டங்களுக்குகல்லெறிவது நாகரீகமா?

Share This


தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதென்பது ஒரு அபேட்சர்கருக்கு இருக்கும் ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். அதனைச் சிறப்பாக அனுபவிக்க அவரை நாம் அனுமதிக்க வேண்டும்.இலங்கையில் சில முஸ்லிம் கிராமங்களில் ஒரு கட்சி மட்டுமே வாக்குக் கேட்க வேண்டும்.அவர்கள் தான் கூட்டம் நடாத்த வேண்டும் என்ற மனநிலையில் செயற்படவதைக் காணமுடிகிறது.

மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அங்கு தேர்தல் பிரசாரக்கூட்டம் நடாத்த முடியாது .துண்டுப்பிரசுரங்கள் பகிரக்கூடாது.ஒரு கட்சி சார் துண்டுப்பிரசுரங்கள் வெள்ளிக்கிழமைகளில் விநியோகித்தல் என்பன ஒரு ஆரோக்கியமான நிகழ்வல்ல.

தமது கிராமத்தில் தமது கட்சி தவிர்ந்த யாரும் அரசியில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.என்பதுதான் உங்கள் சட்டமாக இருந்தால் நீங்கள் என்ன முகத்துடன் ஏனைய கிராமங்களுக்குச் சென்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவீர்கள் .உங்களை சுதந்திரமாக ஈடுபட அம்மக்கள் விடுபடுவார்களா? நீங்கள் ஒரு கெட்டப்போலால் கல்லடித்தால் அதே பாணியில் பல கெட்டப்போல்களினால் நூற்றுக்கணக்காண கற்களை வீசத் தொடங்கினால் நிலைமை எப்படி இருக்கும்.சிந்தியுங்கள்.

அரசியல் கூட்டங்களை குழப்புவது , கல்லெறிவது , கெட்டப்போலால் கல்லெறிவது,மின்சாரத்தை தடுத்தல் இவை எல்லாம் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள்.இவ்வாறான செயற்பாடுகளை வாக்களர்கள் ஒரு போதுமு; விரும்பமாட்டர்கள் , மாற்றுக்கட்சிக்கு எறிகின்ற கற்கள் தமது கட்சியின் வாக்குப்பலத்தையே சிதைக்கும் என்பதை புரியும் காலம் தூரத்தில் இல்லை.

வேட்பாளர்களின் உணர்வுகளை மதியுங்கள் ,அவனும் எமது ஊரவன் ,பிரஜையை சுதந்திரமாக இருக்க விடுங்கள் .தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை மக்களே தீர்மானிப்பர்.அடாவடித்தனம் , சண்டித்தனம், அச்சுறுத்தல் என்பன காட்டி தேர்தல் நடாத்திய காலம் மலையேறிவிட்டது.சட்டம் மிகவும் இறுக்கமாக உள்ளது.வன்முறைகளால் மிதக்கும் வாக்குகள் சத்தியபாதையை நோக்கிச் சென்றுவிடும்.

‘அண்மையில் கல்முனையில் நடைபெற்ற மக்கள் காங்கிரசின் மக்கள் வெள்ளத்தைப் பார்த்துப் பொறாமைகொண்ட சில கூட்டம் நடைபெற்ற மேடைக்கு கல்லெறிந்துள்ளர். இதனால் அப்பாவி மக்கள் காயத்திற்குட்பட்டுள்ளனர்.கூட்டம் மேலும் வீறு கொண்டு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. ஓரிரண்டு கற்களால் துரிதமாக நாடுபுராகவும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு தேசியக் கட்சியை கட்டுப்படுத்தலாம் என நினைப்பது அறியாமையின் உச்ச கட்டமாகும்.

கல்லெறிந்தோர் கல்முனை மக்களின் மானத்தையும் சேர்த்து எறிந்துள்ளனர். இவ்வாறான இழிசெயல்களில் யார் ஈடுபட்டாலும்,அவர் எக்கட்சியைச் சார்ந்தவராயினும் அது கண்டிக்கத்தக்கது.

‘கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முயற்சி செய்யுங்கள்’ கல்லெறியும் நிகழ்வுகளில் சில முஸ்லிம் அரசியில் கட்சிகள் மட்டும் கையாளுவதை காணமுடிகின்றது.இதனால் ஜனநாயகம் கொலை செய்யப்படுகின்றது.

கே.சீ.எம்.அஸ்ஹர்

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE