அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்து கிராமத்தை அபிவிருத்தி செய்ய முடியாது- துமிந்த


நல்லாட்சி அரசாங்கமே 2020 வரை  ஆட்சியில் இருக்குமெனவும் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதனால் இத்தேர்தலில் அரசாங்கம் அமோக வெற்றி பெறுவது உறுதியாகும் எனவும் ஸ்ரீ ல.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பதனால் கிராமங்களை அபிவிருத்தி செய்யவோ மக்களுக்கு சேவை செய்யவோ முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.