அக்கரைப்பற்றிற்கு இன்று நிம்மதியாக வந்து மேடையில் பேசுவதற்கு யார் காரணம்?அக்கரைப்பற்றிற்கு இன்று நாங்கள் நிம்மதியாக வந்து பேசுவதற்கு வழிசமைத்த வல்ல இறைவனுக்கும், தம்பி தவத்திற்கும் முதலில் நன்றிகள் அத்துடன் கடந்த காலங்களில் எங்களை வரவிடாமல் செய்து தடுத்தவர்கள் எங்களை குறைகூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை காரணம் அவர்கள் எங்களை எதையுமே செய்யவிடவில்லை என்றார் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம்,

நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போதே இதனை தெரிவித்தார்,

அக்கரைப்பற்றை யாரும் நினைத்திடாத அளவு அபிவிருத்தி செய்யவுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், பல மில்லியன் ரூபா செலவில் நகரஅபிவிருத்தி அமைச்சின் மூலம் அபிவிருத்திகள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.