மு.கா.தலைமையால் மட்டுமே சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்க முடியும்ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(ஆடியோ).,முஸ்லிம் காங்கிரசின் தலைமையால் மட்டுமே சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்க முடியும். நாபீர் பெளண்டேசன்.

ஆடியோ யாரால் பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்க முடியும்.? :-

www.youtube.com/watch?v=WHEkvcKZR8w&feature=youtu.be

சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகம் நடு நிலையாக இருந்து இத்தேர்தலை கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் மட்டுமே சாய்ந்த மருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவிக்கின்றார் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர்… அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை றிசாட் பதுடீனினால் ஒரு பொழுதும் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்க முடியாது. யார் விரும்பினாலும் சரி விரும்பா விட்டாலும் சரி தனியான பிரதேச சபையானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும் என்பதே அரசியலில் உண்மையான விடயமாக உள்ளது. இதனை நாங்கள் அமைச்சர் றிசாட்டிடம் நிரூபித்து காட்டுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அரசியலில் முட்டால்கள் என வர்ணிக்கப்பட கூடிய சமகாலத்தில் சந்தைகளில் அதிகமாக இருக்கும் சில அரசியல் கட்சிகளின் தலைமைகள் கருப்பு பணத்தினை தூய பணமாக மாற்றிக்கொள்வதற்காக அம்பாறை மாவட்டத்திற்குள் வந்து அரசியல் செய்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் வன்னியினை தலைமையாக வைத்து இயங்குகின்ற அரசியல் கட்சி பொத்துவிலில் சுயற்சையக களமிறங்கவிருந்த குழுவிடம் விலை பேசினார்கள்.

இதிலிருந்து விளங்கிகொள்ள வேண்டிய விடயமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியானது அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையை பழிவாங்கி தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் நகர்வுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய அரசியல் நகர்வானது ஜனநாயக நீரோட்டத்தில் முகத்திற்கு நேரே வந்து தலையை காட்ட முடியாமல் கல்முனை போன்ர பிரதேசங்களில் பின்னால் ஒழிந்து கொண்டு அரசியல் செய்வதனையே பார்க்க கூடியதாக இருக்கின்றது. இதற்கு சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை தகுந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

தேர்தல் காலங்களில் இவ்வாறானவர்கள் முன்வைக்கக் கூடிய கருத்துக்களை “நாபிர் பவுண்டேஷன்” மிக ஆழமாக உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும் அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும சரி தேர்தல் வருகின்ற போது அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்னகளையும் அவர்களுடைய  எதிர்கால திட்டங்களையும் பிரச்சார மேடைகளில் மக்கலுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியல்வாதிகளுடைய கருத்துக்களையும் செயற்பாடுகளையும் வைத்து மக்கள் யாருக்கு வாக்களிபபார்கள் என்று தீர்மானிப்பார்கள். அதைவிடுத்து சகோதரர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை முழுமையாக வசைபாடி திட்டித் தீர்க்கின்ற மேடையாகவே நான் வன்னி தலைமைகளின் மேடைகளை பார்க்கின்றேன். ஊதாரணத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசை எடுத்துக்கொண்டால் மரத்தை விற்றுவிட்டு யானையில் வந்து இருக்கிறார் என்று வசைபாடுபவர்கள் வேறு மாவட்டங்களில் மயிலை விற்று விட்டு யானையில் தேர்தல் கேட்கிறார்களே! இதற்கு என்ன கூறுவது.?

இதனை வைத்து பார்கும் போது பாராளுமன்ற தேர்தலில் 33000 வாக்குகளைப் பெற்ற ஆகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அந்த மக்களுக்காக எதனை செய்துள்ளார்கள்./ என்று கேட்கும் போது நோண்டிச் சாட்டுகளை சொல்கின்றார்கள். அதாவது அவர்கள் கூறுவது என்னவென்றால்.? நாங்கள் கொண்டு வருகின்ற வேலைகளை மன்சூர் தடுக்கிறார் ஹரீஸ் மற்றும் பைசால் காஸிம் தடுக்கிறாரகள் என்ற பொய்யான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதே ஆகும்.

ஆகவே வேலைகனை கொண்டுவருவதற்கான எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. அவர்களால் தடுக்கவும் முடியாது. ஏனென்றால் இருவரும் அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள்.இவ்வாறு கூறுவது வேடிக்கையாக உள்ளது. மற்றும் கையாலகாத தன்மையையும் காட்டுகின்றது.

இவர்களது அரசியல் எவ்வாறு என்றால்.? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை வைத்தே அரசியல் புளப்பு நடத்துகின்றார்கள். இவருக்கு திகாமடுல்ல மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் சேறு பூசியே இவர்கள் அரசியல் புளப்பு நடத்துகின்றார்கள்

கடந்த  பாராளுமன்ற தேர்தலில் 33000 வாக்குகளைப் பெற்ற ஆகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அந்த மக்களுக்காக எதனை செய்துள்ளார்கள்.?
01.SSP Majeed - திணைக்கள பதவி
02. அவரின் தம்பியின் கடைக்கு சதோச வந்தது
03. அவரின் மருமகனுக்கு இனைப்பாளர் வந்தது.
04. Dr SMM Ismail VC
05. Dr Siraz meerasahib
06. Dr Jameel இவ்வாறு இவர்களுடன் பேரம் பேசப்பட்டு பதவிகள் வழங்கப்பட்டும் மக்களுக்கு என்ன வந்தது.? என்பதை யாராவது சொல்வீர்களா? அடிக்கல்லை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
அவர்கள் கூறுவது என்னவென்றால் நாங்கள் கொண்டு வருகின்ற வேலைகளை மன்சூர் தடுக்கிறார் ஹரீஸ் மற்றும் பைசால் காஸிம் தடுக்கிறாரகள் என்ற பொய்யான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள் ஆதலால் வேலைகனை கொண்டுவருவதற்கான எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. தடுகின்றார்கள் என்று குற்றம் சுமர்த்தப்படுகின்றவர்களால் அபிவிருத்திகளை தடுக்க முடியாது.
ஏனென்றால் இருவரும் அரசாங்கத்தை பிரதி நிதித்துவ படுத்துகின்ற அமைச்சர். இவர்கள் இவ்வாறு கூறுவது வேடிக்கையாக உள்ளது. மற்றும் அவர்களௌடைய கையாலகாத தன்மையையும் காட்டுகின்றது. றிஷாட்டினல் அரங்கேற்றப்படும் கபட நாடகங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! என்பதே நாபீர் பெலண்டேசனின் எதிர்பார்ப்பாக இருகின்றது என மேலும் தனது கருத்தினை தெரிவித்தார் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...