பாலமுனையில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் நடாத்தினால் முன்வரிசையில் அமர்வேன்பாலமுனையில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடாத்துமாயின் அதில் ஹக்கீம் கலந்து கொள்வாராக இருப்பின் அந்த கூட்டதில் பார்வையாளர் முன்வரிசையில் நான் அமருவேன் என மயில் சின்னத்தில் களமிறங்கியுள்ள எம் ஏ அன்சில் குறிப்பிட்டுள்ளார்,

நேற்று எமது சிறப்பு செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டார், மேலும் கருத்துரைத்த அவர்

என் மீது சுமத்தப்படுகின்ற அபாண்டமான பழிகளை எனக்கு முன்னால் ஹக்கீம் சொல்லி சத்தியம் செய்வாராயின் அன்று முதல் நான் அரசியலில் இருந்து விடுபடுவேன் எனவும் குறிப்பிட்டார். அதுபோல பாலமுனையில் நாங்கள் கூட்டம் நடாத்த விடமாட்டோம் என ஒரு கட்டுக்கதை நிலவுகிறது அது முற்று முழுதான பொய் என்றார்.