Jan 22, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மன்னாரில் துரித வளர்ச்சி கண்டுள்ளது - காதர் மஸ்தான்





வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் மற்றும் ஜனாதிபதியின்   பிரத்தியோக செயலாளர் சேனக்க அபேகுணசேகரவும் இந்த அலுவலகங்களை திறந்து வைத்தனர். 

தொடர்ந்து மன்னாரில் இன்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு பொதுமக்கள் அணி திரண்டிருந்தனர்.

இங்கு உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ  காதர் மஸ்தான்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மன்னாரில் துரித வளர்ச்சி கண்டு மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதை எமது கூட்டங்களுக்கு வருகை தந்திருக்கும் பெருந்திரளான ஆதரவாளர் பறைசாற்றுவதாக தெரிவித்தார். 

பல உள்ளூராட்சி மன்றங்களை இலகுவாக கைப்பற்றும் அளவுக்கு எமது கட்சி மக்களுடைய பேரபிமானத்தைப் பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுணசேகர உரையாற்றுகையில் 
 
மன்னாரில் நாம் சிறப்பான ஆதரவைப் பெற்றிருக்கிறோம் இந்த ஆதரவைக் காணும் பொழுது மன்னாரின் துரித அபிவிருத்தி எமது கண்களில் தெரிகிறது.

ஜனாதிபதி எம்மீது கொண்ட நம்மிக்கை வீண்போகவில்லை மன்னாரில் நாம் பெறும் வெற்றிக்குப் பின்னால் வரலாறு காணாத முன்னேற்றத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உங்களுக்கு வழங்கும் என்றும் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post