பைஷல் இஸ்மாயில் 
நிந்தவூர் அரசாங்க ஆயூர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் ஒரு வருட பூர்த்தியும், குறித்த வைத்தியசாலைக்காக உழைத்த வைத்தியர்கள், உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (30) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது.
நிந்தவூர் அரசாங்க ஆயூர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இவ்வைத்தியசாலை உருவாக்க காலம் தொடர்க்கம் இன்று வரையான காலப்பகுதிகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு வகையான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கிய வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் சேவையை இன்றைய நிகழ்வின்போது பாராட்டி கௌவித்து அவர்களுக்காக சான்றிதழ்களை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமினால் பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதனை ஏற்பாடு செய்துள்ளேன் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் இதன்போது தெரிவித்தார். 
குறித்த வைத்தியசாலைக்காக உழைத்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவித்த சான்றிதழ்களை இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் பைசால் காசிமினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம விருந்தினருக்கான பரிசில் மற்றும் ஞாபகச் சின்னத்தை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: