Jan 23, 2018

வித்துவானிடம் ஆதாரம் கேட்பாரா சாணக்கியன்..?வித்துவானிடம் ஆதாரம் கேட்பாரா சாணக்கியன்..?
இனி ஒரு போதும் சாணக்கியன், வித்துவானிடம் ஆதாரம் கேட்க மாட்டார்..!

மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீம் பற்றிய இரகசிய ஆவணங்கள் உள்ளதான கதை மிக நீண்ட காலமாக நிலவி வருகிறது. அக் கதை உண்மையா அல்லது பொய்யா என்பதை அறியும் காலம் நெருங்கிவிட்டது எனலாம்.

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் இடம்பெற்ற மு.காவின் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து “ வித்துவானிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் ”என்ற பாணியில் சவால் ஒன்றை விடுத்திருந்தார். இதனை பெரிதாக தூக்கிப் பிடித்து போராளிகளும் பிரச்சாரம் செய்தனர்.

இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை ஏறாவூரில் “ மரணித்த குமாரி குரேயின் வாக்கு மூலம் ” ஒன்று வெளியாகி இருந்தது. தவளை, தன் வாயால் கெடும் என்பதை போல, இது அமைச்சர் ஹக்கீம் தனது வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய விடயமாகும்.

இவ்விடயம் அமைச்சர் ஹக்கீமை விட்டும் பூரணமாக மக்கள்  பார்வையை திருப்புவதற்கு போதுமானதாக அமைந்திருக்கவில்லை. இதற்கு இன்னுமொரு காரணம், குமாரி குரே தொடர்பாக பல விடயங்கள் வெளியிடப்பட்டு, அவ் விடயங்கள் மக்கள் மத்தியில் புளித்துப் போன ஒன்றாக இருந்தமையையும் குறிப்பிடலாம்.

 இருந்தாலும், அன்று வெளியிடப்பட்ட காணொளியானது, இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளி போன்றதல்ல என்பது தான், அங்குள்ள மிக முக்கிய விடயமாகும். அன்று வெளியிடப்பட்ட காணொளியானது, மு.காவின்முன்னாள் தவிசாளர்பஷீர் சேகுதாவூத் குமாரி குரேயிடம் நேரடியாக கதைத்துக்கொண்டிருக்கும் போது பதிவு செய்யப்பட்டவைகள்.

இதற்கு முன்னர் எப்போதும் வெளியிடப்படாதவைகள். இப்படியானவைகளை மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் உள்ளது என்பதை கூட, அமைச்சர் ஹக்கீம் அன்று தான் அறிந்திருக்கலாம்.

இது சீரிய முறையில் சிந்திப்போருக்கும், மரியாதையான செயற்பாடுகளை விரும்புவோருக்கும் ஒரு சிறந்த செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இது அவரிடமுள்ள பெரிய ஆதாரங்களில் இருந்தான ஒரு பகுதி என்றே நம்பப்படுகிறது. ஒருவருடைய  மானத்தை பகிரங்க காட்சிப் பொருளாக்க யாருக்குமே உள்ளம் இடம் கொடுக்காது. அந்த வகையிலான சிந்தனைகளினாலேயே அவைகள் வெளிப்படுத்தப்பட தயக்கம் காட்டப்படுகின்றன.

அமைச்சர் ஹக்கீம் சவால் விட்டால், அதனை பஷீர் வெளியிட  நிர்ப்பந்திக்கப்படுவார். சம்பந்தப்பட்டவரே சவால் விடும் போது, அதனை வெளியிடாமல் இருப்பது பஷீரின் பலவீனமாகிவிடும். இதன் பிறகும் அமைச்சர் சவால் பஷீரிடம் ஆதாரம் கேட்டால் இன்னும் சில விடயங்கள் வெளிப்படலாம். அதன் காரணமாக, இதன் பிறகு, அமைச்சர் ஹக்கீம் ஒரு போதும் வித்துவானிடம் ஆதாரம் கேட்க மாட்டார். இதனை வைத்தும் மு.காவின் முன்னாள் தவிசாளரிடம் சில இரகசியங்கள் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

அமைச்சர் ஹக்கீம், மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பற்றி விடுக்கும் ஒவ்வொரு விடயத்துக்கும் அல்லது சவாலுக்கும், மு.காவின் முன்னாள் தவிசாளர் விடையளிக்கும் மனோ நிலையில் உள்ளார் என்பதையும் இவ்விடயத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.

அமைச்சர் ஹக்கீம் தன் மானம் உள்ளவராக இருந்தால், இதன் பிறகும் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பற்றி கதைக்கட்டும் பார்க்கலாம். ஒரு போதும் கதைக்க மாட்டார். எமது சமூகம், தன் மானம் உள்ள ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். இன்று பலர் ஒப்பாரி வைப்பதைப் போல, இன்னும் காலம் தாழ்த்தி ஞானம் பெறுகையில், எமது சமூகம் மீட்க இயலாததொரு புதை குழியில் வீழ்த்தப்பட்டிருக்கும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 
சம்மாந்துறை.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network