Jan 16, 2018

தேசிய சொத்­து­க்களை விற்­பனை செய்­வ­தற்கு அர­சாங்கம் திட்டம்மத்­தள விமான நிலையம், ஹில்டன் ஹோட்டல், ஹைட் ஹோட்டல், திரு­மலை எண்­ணெய்க்­குதம், காப்­பு­று­திக்­கூட்­டுத்­தா­பனம், இலங்கை போக்­கு­வ­ரத்து சபை, ரயில்வே திணைக்­களம், மின்­சார சபை, நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்­புச்­சபை உள்­ளிட்ட தேசிய சொத்­து­களை விற்­பனை செய்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் அவை விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக கூட்டு எதி­ர­ணியி்ன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தை­யி­லுள்ள பொது­ஜன பெர­மு­னவின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணை கிடைத்­தது. ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் நல்­லாட்சி, ஜன­நா­யகம், சட்­ட­ ஆட்சி, நல்­லி­ணக்கம், ஊழல் மோச­டி­க­ளற்ற ஆட்சி, அபி­வி­ருத்­தி­யான நாடு போன்­ற­வற்றை தேர்தல் வாக்­கு­று­தி­க­ளாக வழங்­கினர். எனவே அதற்கு மக்கள் ஆணை வழங்­கினர். எனினும் அர­சாங்கம் அவ்­வாக்­கு­று­திகள் எத­னையும் நிறை­வேற்ற வில்லை. 

தேர்­தலின் பின்னர் பிர­தம நீதி­ய­ர­சரை நீக்­கி­விட்டு பாரா­ளு­மன்றில் குறைந்­த­ள­வான ஆத­ர­வுள்ள ரணில் விக்­கிர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­கி­ய­துடன் நல்­லாட்சி என்ற விடயம் இல்­லா­து­ செய்­யப்­பட்­டது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாது இரண்­டரை வரு­டங்கள் காலம் தாழ்த்­தி­ய­தனால் ஜன­நா­யகப் பண்­பி­லி­ருந்தும் அர­சாங்கம் வில­கி­யுள்­ளது.

மேலும் நாட்டில் ஒவ்­வொரு தரப்­பி­ன­ருக்கும் மாறு­பட்ட வகையில் நீதி செலுத்­தப்­ப­டு­கி­றது.  கூட்டு எதிர்க்­கட்­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு ஒரு­வ­கை­யிலும்  அர­சாங்க தரப்பில் உள்­ள­வர்­க­ளுக்கு மற்­று­மொ­ரு­வ­கை­யிலும்  நீதி செலுத்­தப்­ப­டு­கி­றது. கூட்டு எதிர்க்­கட்­சி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டமா அதிபர் இரு வாரங்­களில் வழக்குத் தாக்கல் செய்­கிறார். ஆனால் மத்­திய வங்­கியில் பாரி­ய­ளவில் மோசடி இடம்­பெ­ற்றுள்­ள­துடன் அது தொடர்­பி­லான ஆவ­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் அதற்கு எதி­ராக சட்­டமா அதிபர் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இல்லை. எனவே சட்ட ஆட்­சியும் இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது. 

அர­சாங்கம் நல்­லி­ணக்கம் பற்­றிப்­பே­சி­ய­போ­திலும் நல்­லி­ணக்­கமும் அமுலில் இல்லை. இன­வாத பிரச்­சினை மீண்டும் நாட்டில் எழுந்­துள்­ளது. காலி கிந்­தோட்­டையில் இடம்­பெற்ற அசம்­பா­விதத்தைக் குறிப்­பி­டலாம். அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் வழங்­கப்­பட்­டுள்து. குறித்த மோச­டியில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உட்­பட ஐக்­கிய தேசியக் கட்­சியின் 10 உறுப்­பி­னர்கள் வரையில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். ஆகவே ஊழல் மோச­டி­யற்ற ஆட்­சி­யி­லி­ருந்தும் அர­சாங்கம் தவ­றி­யுள்­ளது.

அத்­துடன்  அபி­வி­ருத்தி தொடர்பில் அர­சாங்கம் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது. எனினும் கடந்த மூன்று ஆண்­டு­களில் 14.6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து கட­னாகப் பெறப்­பட்­டுள்­ளன.   அக்­கடன் மூலம் எவ்­வித அபி­வி­ருத்­தியும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்சிக்காலத்தில் கடன் பெறப்­பட்ட போதிலும் அதன்­மூலம் ஏரா­ள­மான அபி­வி­ருத்தித் திட்­டங்கள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  கடந்த அர­சாங்கம் ஆரம்­பித்த வேலைத்­திட்­டங்­க­ளையே நல்­லாட்சி அர­சாங்கம் தற்­போது திறந்து வைக்­கி­றது. 

எனினும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்த்­துக்­கொண்டு வரு­கிறார். அம்­பாந்­தோட்டை துறை­முகம் விற்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் இன்னும் பல தேசிய சொத்­து­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. மத்­தள விமான நிலையம், ஹில்டன் ஹோட்டல், ஹைட் ஹோட்டல், திருமலை எண்ணெய்க்குதம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம் என்பவற்றை யும் விற்பனைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம், மின்சார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை உள்ளிட்ட வளங்களும் விற்பனை செய் யப்படவுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமாகவிருந்தால் மேற்சொன்ன வளங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post