கள்ளர்களை தப்பிக்கவிடவே, அதிகாரத்தில் உள்ள அனைவரும் முயற்சி - முஸம்மில் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

கள்ளர்களை தப்பிக்கவிடவே, அதிகாரத்தில் உள்ள அனைவரும் முயற்சி - முஸம்மில்

Share This
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் சிவில் வழக்கினூடாக காய்நகர்த்தவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. கள்ளர்களை தப்பிக்கவிடவே அதிகாரத்தில் உள்ள அனைவரும் முயற்சித்து வருகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார். ஜனாதிபதி- பிரதமரின் முரண்பாடுகள் சர்வதேசத்திற்கு தவறான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மோசமாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷவின் மீது  பழிசுமத்தி இவர்கள் அனைவரும் தப்பித்துக்கொள்ளவே முயற்சித்து வருகின்றனர். அதற்காகவே பொய்யான காரணிகளை கூறி வருகின்றனர்.

 எனினும் மஹிந்த  தரப்பில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக  உள்ளனர். ஆனால் அர்ஜுன் மகேந்திரன் இதுவரையில் மத்திய வங்கி பிணைமுறி குறித்து வாய்திறக்காது தலைமறைவாகி உள்ளார். சிங்கபூர் அரசாங்கம் அவரை இலங்கைக்கு அனுப்பப்போவதும் இல்லை. ஆகவே இந்த அரசாங்கம் செய்த குற்றம் என்னவென்பதை இப்போது வெளிவந்துள்ளது இனிமேல் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE