Jan 21, 2018

அட்டாளைச்சேனையில் அமைச்சர் றிசாத்திற்கு அமோக வரவேற்பு - படங்கள்

சப்னி அஹமட்- 

 ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் மக்களுக்கு தெளிவு வழங்கும் பொதுக்கூட்டமும் நேற்று (20) அட்டாளைச்சேனை பிரதான வீதியில் முன்னாள் நீதிபதி கபூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதுடன் அதிதிகளாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹசன் அலிஇ பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் ராஹ்மான், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல். ஜவாத், ஜெமீல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும்இ இம்முறை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான எம் ஏ அன்ஸில், அப்துல் முனாப், தீனுல்லா, மஹ்தூம், ரியாஸ், இக்பால், ரபீக் உள்ளிட்டவர்களின் அறிமுகங்களும் இடம்பெற்றவுள்ளதுடன், மக்களுக்கு தெளிவு வழங்கும் முக்கிய உரைகளும் இடம்பெறது




Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post