மரம் யானையை தாக்கி இணைப்பாளர் சம்மூன், வேட்பாளர் ஹக்கீம் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

மரம் யானையை தாக்கி இணைப்பாளர் சம்மூன், வேட்பாளர் ஹக்கீம் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்

Share This


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(வீடியோ).,செம்மண்ணோடையில் மரம் யானையை தாக்கி இணைப்பாளர் சம்மூன், வேட்பாளர் ஹக்கீம் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்.
வீடியோ நடந்தது என்ன.? வேட்பாளர் ஹக்கீம் 
கல்குடா, கோறளைப்பற்ரு வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டராத்திற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் போட்டியிட களத்தில் குதித்துள்ள கராத்தே மாஸ்டர் கபூரின் ஆதரவாளர்களுக்கும் அதே வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் களமிறக்கபட்டுள்ள சமூர்த்தி முகாமையாளர் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் இணைப்பாளர் சம்மூன் ஆகியோர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமானது பிரச்சனையாக மாறிய சம்பவம் இன்று 16.01.2018 செவ்வாய் கிழமை செம்மண்னோடை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சீமந்து புளக் கல்லினை கொண்டு இணைப்பாளரும் பிரதி அமைச்சர் அமீர் அலியில் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சம்மூனுடைய தலையில் கடுமையாக தாகப்பட்டுள்ளதால் ஆறு தையல்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சிறு காயங்களுடன் குறித்த வட்டார வேட்பாளர் ஹக்கீம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ருப்பது கல்குடா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தேர்தல் வன் முறையாக பார்க்கப்படுகின்றது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக தனது கருத்தினை தெரிவித்த வேட்பாளரும் சமூர்த்தி முகாமையாளருமான ஹக்கீம்…  பிரதேச சபையினுடைய பெக்கோ இயந்திரத்தினை கொண்டு வேட்பாளர் கபூரினுடைய ஆதரவாளர்கள் குறித்த பிரதேசத்தில் நீர் வடிந்தோடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்த வேலையில் நானும், சம்மூனும் சீரான முறையில் வீதி ஆரம்பிக்கப்படுகின்ற இடத்திலிருந்து இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டும் என கூறிய வேலையில்தான் இவ்வாறாக எங்களை தாக்கமுற்பட்டார்கள் என தெரிவித்தார். அத்தோடு இவ்வாறு தேர்தல் காலங்களில் பிரதேச சபையினுடைய இயந்திரங்களை கொண்டு தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தேர்தல் சட்டதிட்டங்களை மீறி நடக்கின்ற செயற்பாடுகள் எனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.


குறித்த சம்பவம் தொடர்பாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஹக்கீம் தெரிவித்த விரிவான கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE