இந்த விடயத்தில் ஜனாதிபதி தடுமாறுகிறார்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

இந்த விடயத்தில் ஜனாதிபதி தடுமாறுகிறார்!

Share Thisபொது எதிரணியினர் பிரதமரை பார்த்து  கள்ளன் என்கின்றனர்.  ஐக்கிய தேசிய கட்சியினர்  மஹிந்த அணியினரைப் பார்த்து,  கள்வர் கூட்டம்
என்கின்றனர்.. யார் களவெடுத்தலும் தப்பிக்க முடியாது என மைத்திரி அணியினர் கூறுகின்றனர்.. ஜனாதிபதியோ யார் கள்ளன் என்பதைத் தீர்மானிக்க முடியாது தடுமாறுகின்றார். இதுவே, இன்றைய நல்லாட்சியின் நிலை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  (13 ம் திகதி) இரவு கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

வேட்பாளர் நாஸிக் மஜீத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம் தலைமைகள் இருவரும் உறுதின்ற உரையைக் கேட்கின்ற போது, மக்களுக்கு சிரிட்டதா அழுதுவதா என்று தெரியவில்லை.

 இந்த தேர்தல் மூலம்  பெரிய கட்சிகளுக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என ஒருவரும் யானைச் சின்னத்துக்கு அளிக்கின்ற வாக்குகள் முஸ்லிம்களின் குரல் வளையை நசிக்கும் என இன்னொரு முஸ்லிம் தலைவரும் கூறுகின்ர்.  ஒரு இடத்தில் கூறுகின்ற  கருத்தை இன்னுமொரு இடத்தில் கூற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கல்முனையில் ஒரு கதையையும்  காத்தான்குடியில்  ஒரு கதையையும் புத்தளத்தில் ஒரு கதையையும் மூதூரில் இன்னுமொரு கதையையும் கூறுகின்றனர் இது அவர்களுடைய அரசியல் பின்புலத்தைக் காட்டுகின்றது. மக்களை விற்று வாழ்கின்ற அவர்களின் தொடர் நாடகத்தை எடுத்துக் காட்டுகின்றது.

மாகாண சபை திருத்தச் சட்டம், உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக பாராளமன்றத்தில் வாக்களித்து விட்டு, முஸ்லிம்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என இன்று மக்களிடம்  வந்து  கேட்கிகின்றனர். என்ன கொடுமை இது.

பதவிக்காக, சுயநலத்துக்காக சந்தர்ப்பவாத அரசியலை பல படித் தரங்களில் இவர்கள் நடாத்தி வருகின்றனர். இந்த இடத்தில் தான் முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டியிருக்கிது.  மக்களுக்கு பாதுகாப்பான மக்களுக்கு விசுவசமான , மக்களின் அரசியல் மரியாதைகளைப் பாதுகாக்கக் கூடிய,  மக்களின் தனித்துவமான குரல்க இயங்ககக் உடிய, புதிய அரசியல் சக்தி ஒன்றின் தேவையை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மூலம் சாதிக்க மக்கள் அணி திரள வேண்டும்.


அளுத்கமயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட ஈடு கொடுப்பதற்கு மூன்று வருடங்கள் தேவை பட்டது. அதே மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அதி சொகுசு வாகானத்தை இறக்குமதி செய்வதற்கு மூன்றே மாதம் போது மாக இருந்தது. இதுதானா நல்லாட்சி.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக  முக்கியமான தீர்மானம் ஒன்றை சர்வதேச சமூகம் எடுக்கப் போகின்றது. பல இழப்புக்களைச் சந்தித்த தமிழ் சமூகத்துக்காக அவர்களின் தலைமைகள் சரியாக காய் நகர்த்திக் கொண்டிக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் சகேத்தின் நிலை என்ன? ஊருக்கு மூன்று எம்.பி இருக்கிறார் . அமைச்கள் இருக்கிரார்தர். பிரதி அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று சுய பெருமை பேசுகின்றவர்களாக இருக்கின்றோமே தவிர, எமது அரசியல் பாதுகாப்பு குறித்து நாம் சிந்திக்கக் தவறிவிட்டோம்.

இந்த நிலையில் எதுவித அரசியல் அதிகாரமற்ற சக்தியாக எமது முன்னணி இருந்தும் கூட எமது சமூகத்தின் அரசியல் இருப்பு தொடர்பாக சர்வதேசத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
 அலுத்கம மற்றும் ஜின்தோட்டை  சம்பவங்கள் தொடர்பாக ஜெனிவாவில் முழமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து வரலாற்று முக்கியத்துவத்தை பெற்ற கட்சி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தான்

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE