கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாட்டுடன் நேற்று இடம்பெற்ற கல்வி வழிகாட்டல் செயலமர்வு.(எம்.என்.எம்.அப்ராஸ்)       

பலக்லைக்கழகங்களிற்காக வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பான செயலமர்வில் மாணவர்களிற்கான பொருத்தமான கல்வி வழிகாட்டல் ஆலோசனைகளும், பல்கலைக்கழக கையேடு பற்றிய முழு விபரங்களும் முன்வைக்கப்பட்டது.         மற்றும்  பல்கலைக்கல்வி தொடர்பாக ஊக்கப்படுத்தல்களும் இவ் நிகழ்வில்  வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு பிரதான வளவாளர்களாக

சிரேஷ்ட விரிவுரையாளர். எச். எம்.    நிஜாம் (விரிவுரையாளர்- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)  அவர்களும்,

றிஷாட் ஷரீப் சேர் (பிரபல ஆசிரியர்) அவர்களும்,

எம்.வை இம்ரான்(ஆசிரியர்,முன்னாள் உதவி விரிவுரையாளர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதில் மாணவர்கள் தங்களது கல்வி ரீதியான சந்தேகங்களிற்கு தெளிவினை அடைந்ததுடன் பூரண விளக்கங்கள் இவ் நிகழ்வின் விரிவுரையாளர்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.