பம்பலபிட்டிய டுப்ளிகேஷன் வீதியில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கடை முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த தீ விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸார், தீயணைப்பு படையினர், பிரதேசவாசிகள் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீயினால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share The News

Post A Comment: