பள்ளிவாசல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தடை; மீறினால் குடியுரிமை பறிப்பு!பள்ளிவாசலில் தேர்தல் பிரச்சார நடவடிக்கை செய்தல், பள்ளிவாசல் தலைவர்கள் கூட்டங்களில் பங்கேற்றல் பிரச்சாரம் செய்தல், பள்ளிவாசல் பேஷ் இமாம்கள் பிரச்சாரம் செய்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பல விடயங்களை குறிப்பிட்ட பிற்பாடு  எமது கொழும்பு சிலோன் முஸ்லிம் செய்தியாளர்களுக்கு பதிலளித்த போதே இந்த மேலதிக தகவலை அவர் தெரிவித்தார்.

மதஸ்தலங்களை அல்லது அதன் நிருவாகத்தினரை தேர்தலுக்கு பயன்படுத்துதல் அவர்கள் செயற்படுதல் குற்றமாகும் என்றார், அப்படி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமெனின் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்திருக்க வேண்டும், குறித்த தடைகளை மீறுபவர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படும் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...