அரச மதிப்பீட்டாளா்கள் சங்கம் நிதி அமைச்சின் முன்னாள் ஆர்ப்பாட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அரச மதிப்பீட்டாளா்கள் சங்கம் நிதி அமைச்சின் முன்னாள் ஆர்ப்பாட்டம்

Share This

(அஷ்ரப்  ஏ சமத்)

அரச மதிப்பீட்டாளா்கள் சங்கம்  இன்று (23) கொழும்பு கோடடையில் உள்ள நிதி அமைச்சின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினாா்கள்.   நாடு முழுவதிலும் அரச மதிப்பீட்டாளா்கள் 350 பேருக்கு மேற்பட்டோா் மதிப்பீட்டுத் திணைக்களத்தில் கடமையாற்றி வருகின்றனா். 

 கடந்த ஆட்சியில் மதிப்பீட்டாளா்களது குறைபாடுகள், சம்பள அதிகரிப்பு பதவியுவா்வுகள் புதிய மதிப்பீட்டாளா்கள் ஆட் சோ்ப்பு பற்றி  2014.12.12ல் நிதியமைச்சின் ஊடக அமைச்சரவை பத்திரம்அனுமதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. . 

ஆனால் இதுவரைஅப்பத்திரத்தில் குறிப்பிட்டவைகளை நிதி அமைச்சோ திணைக்களமோ  நடைமுறைப்படுத்த வில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா். இவா்கள் நிதியமைச்சிற்குள் செல்ல முட்பட்டபோது பொலிசாா்  இரு மருஙகிலும் வீதிக் தடைகளை வைத்து தடுத்து  நிறுத்தினாா்கள். 

அத்ததுடன்  மதிப்பிட்டு கடைமைகள், வேலைகளை அரசாங்கம் தணியாா் கம்பணிகளுக்கு வழங்கி வருகின்றது. இதனால் நாட்டில் அரச சொத்துக்களுக்கு நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் நிகழ்கின்றன.. எனவும் ஆர்ப்பாட்டத்தின்போது அரச மதிப்பீட்டாளாா்கள் சங்கத்தின் செயலாளா செனவிரத்தின தெரிவித்தாா்.  

அவா் தொடா்ந்து தகவல் தெரிவிக்கையில் - 

மதிப்பீட்டு திணைக்களத்தில் கடமையாற்றும் சகல மதிப்பீட்டாளா்களும் பல்கலைக்கழகத்தில் பி.எஸ் சி, பட்டப்படிப்பினை முடித்து  மதிப்பீட்டுத்துறையில்  விசேட பட்டம் பெற்றவா்கள்.  எனவும் அவா்களுக்குரிய இடம் கடந்த  அரசும் தற்போதைய அரசும் கவணத்திற் கெடுக்கவில்லை யென அவா் தெரிவித்தாா்.   

ஏற்கனவே 50 மதிப்பீட்டாளா்கள் அவுஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்கின்றனா. காரணம் இலங்கையில் மதிப்பீடடாளா்களுக்குரிய வரப்பிராசாரம் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தாா். அத்துடன்   அவா்களது மனு  நிதி அமைச்சின் செயலாளாிடம்  பொலிசாரின்  உதவியுடன் கையளிக்கப்பட்டது. 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE