மத்திய வங்கியின் பினைமுறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையால் தமது கட்சிக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கை தொடர்பில் ஏனைய கட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்துமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல் ஆணையகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இவ்வாறான செயல் நடைபெறுவது தமது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை மேலும் சில கட்சிகளுக்கு இதன்மூலம் நன்மை கிடைத்துள்ளதாகவும் ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் ஊடகங்களில் தமது கட்சிக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த நடவடிக்கைகளால் தமது கட்சி தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அசெளகரியங்களை சந்தித்திருப்பதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share The News

Post A Comment: