ஏறாவூரில் யானை தாக்கி ( சின்னத்தம்பி ஹாஜியார்) உயிரிழப்பு!ஏறாவூர் மகளிர் பாடசாலை வீதியை வசிப்பிடமாக கொண்ட மாட்டு வியாபாரி சின்னலெப்பை நூர் முஹம்மட் ( சின்னத்தம்பி ஹாஜியார்) (56) இன்று காலை கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள கார்மலை எனும் பகுதியில் உள்ள தனது மாட்டுப் பட்டியடிக்கு சென்ற வேளை யானை தாக்கியதில் காயமுற்று வைத்தியசாலை நோக்கி கொண்டு வரும் வழியில் வபாத் ஆகி விட்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜனாஸா தற்போது ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் சில வருடங்களுக்கு முன்னரும் யானையால் தாக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்து இருந்த நிலையிலே இன்று காலை மீண்டும் தாக்கப்பட்டு உயிரிழந்துளளார்...

அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்ளட்டும்....

முகம்மத் அஸ்மி