கிழக்கை பிரிப்பது குறித்து பலரும் நீண்டகாலமாக உரத்துக் குரல் கொடுத்த போதும் எமது கட்சியே அதை முன்னின்று செய்து காட்டியது. அதுமாத்திரமின்றி கிழக்கு பிரிப்புக்கு ஆதரவாக மூன்று அடிப்படை உரிமை மனுக்களை  தாக்கல் செய்து வாதாடியதும் இல்லாமல் 2006ல் வென்றும் உறுதிப்படுத்தியது. இது அனைவரும் அறிந்த விடயம் என மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் எம்.ரீ.முஹம்மட் ஹஸ்ஸான் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

அந்தக் காலப்பகுதியில் வந்த தேசியப் பத்திரிகைகளைப் புரட்டிப் பாருங்கள் எங்காவது ஜே.வி.பி.தவிர ஏனைய கட்சிக்காரர்களுக்கு எங்காவது பங்கிருக்கிறதா என்று. ஆனால் சில பேர் அவர்களே தாம் சாத்தியப்படுத்தியதாக  இந்தத் தேர்தல் மேடைகளில் கதை பரப்பி இலாமீட்ட நினைப்பதை பொறுப்பு வாய்ந்த எமது கட்சியால் வாய்பொத்திக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share The News

Post A Comment: