Jan 22, 2018

மஸ்தான் எம்.பி க்கு ஜனாதிபதியின் செயலாளர் புகழாரம்.



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு செயற்றிறன் மிக்க இளம் பிராந்தியத்த் தலைவர் கிடைத்திருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம் என ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுணசேகர தெரிவித்தார். 

மன்னார் எமில் நகரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே இவ்வாறு புகழாரம் செய்தார்.

வரலாற்றில் இல்லாதவாறு முழு கிராம மக்களும் ஒன்று திரண்டு மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். 

இங்கு தொடர்ந்து  உரைநிகழ்த்திய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் இந்த எமில் நகரில் போட்டியிடும் எமது இரு வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளமையை இங்கே கூடியிருக்கும் முழு கிராம மக்களும் உறுதி செய்கின்றனர் என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் கூறியமை குறிப்பிடத்தக்கது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post