வேட்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ்) ஆதரித்த கலந்துரையாடல்.பைஷல் இஸ்மாயில் - 

மிக அதிகப்படியான வாக்குகளினால் அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளி வட்டாராத்தை வெற்றிகொள்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் அதற்கான சகல முயற்சிகளையும் இன்றிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் சுகாதர அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் 

எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஜூம்ஆ பள்ளி வட்டாராத்தில் - (03, 07, 12) ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ்) ஆதரித்த கலந்துரையாடல் அட்டாளைச்சேனை 12 ஆம் பிரிவில் நேற்றிரவு (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதர அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள சகல வட்டாரங்களையும் வெற்றிகொள்வதற்கான சகல வியூகங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் வகுத்து வருகின்றது. அதற்காக சகல முன்னெடுப்புக்களையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். 

போராளிகளிகளாகிய நாம் மிகத் தெளிவாக இருந்து செயற்படும் காலம் இதுவாகும். யாருடைய ஏமாற்றுக் கதைகளையும் நாம் நம்பாமல் அவர்களின் ஏமாற்றுக் கதைகளுக்கும், பொய்யான செயற்பாடுகளுக்கும் வலைந்து போகதவர்கள் என்பதை இத்தேர்தலின் மூலம் நிருபித்துக் காட்டுவோம். அதற்காக நாம் இன்றிலிருந்து சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுப்போம் என்றார். 

மேலும், வேட்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ்)  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலீல் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...