ஒரு தடவை விட்ட பிழையை மீளவும் விட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தடவை தமது ஆட்சிக் காலத்தில் இழைத்த பிழைகளை மீளவும் இழைக்கப் போவதில்லை.

மீளவும் தவறு இழைக்கும் மனிதனல்ல இந்த மகிந்த ராஜபக்ச. மைத்திரிபால சிறிசேன, பிரதமரை விரட்டிய விதம், பிரதம நீதியரசரை பணி நீக்கிய விதம், 41 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பிரதமராக்கிய விதம், புதிய பிரதம நீதியரசரை நியமித்த விதம் என்பன வரலாற்றில் எழுதப்பட்டு விட்டன.

இதனையா நல்லாட்சி என்று கூறுவது, ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட போதே நல்லாட்சி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பில் யாரை நியமிப்பது என்பது பற்றி தீர்மானிக்கவில்லை.

எம்மிடம் பல தலைவர்கள் இருக்கின்றார்கள், வெளி நபர்களும் இருக்கின்றார்கள்.மக்கள் யாரை கேட்கின்றார்களோ மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: