Jan 18, 2018

இன்று வௌிநாடு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்



ஶ்ரீ லங்கன் விமான சேவையில் இன்றைய தினம் இடம்பெறவிருந்த விமான சேவைகளின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய விமான எல்லையில் மேற்கொள்ளப்படும் சோதனையோட்டம் காரணமாக இவ்வாறு விமான சேவைகளின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , கோலாலம்பூர் , பேங்கொக் , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து கட்டுநாயக்க வரை இன்று இடம்பெறவிருந்த 9 விமான சேவைகளின் நேர அட்டவணையில்  இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் தெரிவித்தது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post