உயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சாதித்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு உதவித்தொகைபாறுக் ஷிஹான்

கடந்த  கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில்  பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற  யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாகரனை  யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கௌரவித்துள்ளார்.

குறித்த மாணவனின் வீட்டுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாணவன் மற்றும் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது பரிசாக உதவித்தொகை ஒன்றையும் வழங்கியுள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி இம்மாணவன்  பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...