முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்பொழுது அமெரிக்காவில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றிட்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, தேர்தல் நடவடிக்கைகளில் கோத்தபாய ராஜபக்சவை ஏன் காணமுடியாதுள்ளது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், தற்பொழுது ஒவ்வொருவரும் பொய் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எமது அணியிலிருந்து மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவர்களையே நாம் முன்னிலைப்படுத்துவோம்.

மக்கள் விரும்புவதையே நாங்கள் கொடுப்போம். மக்களது விருப்பத்திற்கு தகுதியானவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கோத்தபாய ராஜபக்ச ஈடுபடாத நிலையில் பலரும் அவர் தலைமறைவாகிவிட்டதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: