கல்லெறிந்தது தேசிய காங்கிரஸ்காரர்களே, நானல்ல என்று அன்சில் மழுப்பல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

கல்லெறிந்தது தேசிய காங்கிரஸ்காரர்களே, நானல்ல என்று அன்சில் மழுப்பல்

Share This


பாலமுனையில் நேற்று இரவு ஒரு கலவரமே இடம்பெற்றது,  களத்திலிருந்த எமது செய்தியாளர் வாஜித் தரும் கூடுதல் தகவல்கள்.

முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு பாலமுனை பிரதான வீதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரை நிகழ்த்திய ஹூதைப் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சில் செய்த பல மோசடிகளை பகிரங்கமாக பேசினார். இந்த உரை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது அன்சில் கூட்டமேடைக்கு அருகில் வந்து குளறுபடி செய்தார் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரை பின்னால் போக அறிவுறுத்தல் விடுத்தனர், அதனை பொருட்படுத்தாத அன்சிலின் ஆதரவாளர்கள் கைத்தகராறில் ஈடுபட்டனர். அங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது.

பின்னர் கலகமடக்கும் போலீசார் அந்த இடத்தில் பிரச்சினைகளை சுமுகமாக்க முயற்சித்தனர், ஆனால் முடிந்தபாடில்லை அன்சில் குழுமியிருந்த பக்கத்திலிருந்து கற்களும், போத்தல்களும், வானவெடில்களும் மேடைப்பக்கமாக பதம் பார்த்துக் கொண்டிருந்தது, இதற்கிடையில் அமைச்சர் ஹக்கீமும் கூட்ட மேடைக்கு வந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தது, கூட்டம் முடிவடைந்த பின்னர் பார்க்க வந்த திரும்பிய  பொதுமக்களுக்கு பெரிய செங்கற்களும், போத்தல்களும், செயின்களும் எறியப்பட்டன, பலர் காயமுற்றனர், சிலரின் வாகனங்களும் பாதிக்கப்பட்டது. சிலரின் ஹெல்மட்டுககள் உடைந்தன, இவை யார் செய்தார்கள் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்.

இது தொடர்பில் எம் ஏ அன்சிலிடம் பல முக்கியஸ்தர்கள், அழைப்பு விடுத்து கேட்டதற்கு அன்சில் சொன்னாராம், நாங்கள் செய்ய வில்லை தேசிய காங்கிரஸ் காரர்கள்தான் திட்டமிட்டு செய்தனர் என்று, போத்தல்கள் - செயின்கள் - கற்கள் எல்லாம் அவர்கள்தான் எறிந்தனர் என்று, இது வெறும் மழுப்பல்தான்.

குழுமியிருந்த அன்சில் ஆதரவாளர்கள், உதுமாலெவ்வையின் ஆதரவாளர்கள் கற்களுடன் இருந்தமையினை பொதுமக்கள் சிலர் பொலிசாரிடம் இனம் காட்டியுள்ளனர், இது தொடர்பான விசாரணை பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இடம்பெறுகிறது. இது தொடர்பான பல வீடியோ பதிவுகள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கூடுதல் செய்திகள் இன்று எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE